பாளையங்கோட்டை சிறையில் டிஐஜி தலைமையில் போலீசார் சோதனை

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறைத்துறை டிஐஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சோதனை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனை நிறைவடைந்த பிறகே செல்போன்கள், சிம்காடுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா? என்பது தெரியவரும்.

Related Posts