பாளையங்கோட்டை பிரச்சாரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: அதிமுக கட்சியில் 2 பெர் கைது

நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாளைங்கோட்டையில்  பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு 100ரூபாய் கொடுத்து  டோக்கன் வழங்கப்படுவதாக கிடைத்த  தகவலை அடுத்து பறக்கும் படை அதிகாரிகள் மனக்காவலம் பிள்ளை  நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது டோக்கன் பெற்றுக்கொண்டு பணம் வழங்கிக் கொண்டிருந்த  சமத்துவ மக்கள் கட்சி  நிர்வாகிகள் பொன்னுத்தாய், இறையன்பு ஆகியோரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.  இருவரையும் கைது செய்த  காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 23 ஆயிரத்து 265 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related Posts