பா.ஜனதா  ஆட்சிக்கு வந்தவுடன் வர்த்தகர்களுக்கு  50 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படும்: பிரதமர் மோடி

டெல்லியில் நேற்று நடந்த வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வர்த்தகர்கள், வியாபாரிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று தெரிவித்தார்.  வர்த்தகர்களின் பங்களிப்பு இல்லை என்றால் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் 2 மடங்கு அதிகரித்து இருக்காது என்று குறிப்பிட்டஅவர்,  கடந்த 5 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் வியாபாரிகளுக்கு கடன் பெறுவதற்கான வசதிகள் எளிமையாக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்படும் என்று கூறிய அவர்,  வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி 50 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Posts