பிக்பாஸ் கவின் தாயார் ராஜலட்சுமி உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள கவினின் தாயார் ராஜலட்சுமி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு திருச்சி நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

திருச்சி கே.கே.நகரில் ராஜலட்சுமியும் அவரது தந்தை அருணகிரி, தாய் தமயந்தி, சகோதரர் சொர்ணராஜன், சகோதரர் மனைவி ராணி ஆகியோர் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இதில் பணம் கட்டி வந்த 34 பேர், தாங்கள் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாகவும் ஆனால் தங்கள் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த வழக்கு, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சொர்ணராஜன், அருணகிரி ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமிக்கு மோசடி வழக்கில் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Related Posts