பிட் இந்தியா திட்டத்தை குறித்து உறுதிமொழி

மதுரை மன்னர் கல்லூரியில் மாணவ மாணவிகள் பிட் இந்தியா திட்டத்தினை ஏற்றுக் கொள்ளும் விதமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மற்றும் மதுரை மாவட்ட நேரு யுவ  கேந்திரா இணைந்து பிரதமர் மோடியின் “பிட் இந்தியா மொமென்ட்’ நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்தனர்.   புதுதில்லியில் நடைபெற்ற “பிட் இந்தியா’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதை மாண, மாணவியர் ஆர்வத்துடன் கேட்டனர். பின்னர் நிகழ்ச்சி தொடர்பாக கல்லூரி முதல்வர் பி.மனோகரன் உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத்தொடர்ந்து மாணவ, மாணவியர் , என்சிசி வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பத்தாயிரம் அடி நடைப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட நேரு யுவகேந்திர உதவி இயக்குநர் செந்தில்குமார்,  என்எஸ்எஸ் திட்ட அலுவலர் அழகேசன், பாரத ஸ்டேட் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் சிவா, கல்லூரி முதல்வர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts