பின் வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்

இந்திய விமானப்படையை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் எப்-16 ரக போர் விமானங்கள் பின் வாங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இன்று அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுவீசி தாக்கின.
. இந்த அதிரடி தாக்குதலில், பலாகோட், சகோதி, முசாபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகம்மது இயக்க கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் சின்னாபின்னமானது. இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தான் போர் விமானங்கள் அங்கு விரைந்து வந்தன.

ஆனால், இந்திய விமானப்படையின் பலத்தை பார்த்ததும் எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தானின் F-16 போர் விமானங்கள் திரும்பி விட்டன. இந்த தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Related Posts