பியானோ இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு இசை அஞ்சலி செலுத்தினார்லிடியன் நாதஸ்வரம் 13 வயது சிறுவன் பியானோ இசை உலகில் உலக புகழ்பெற்ற கலைஞன். சமீபத்தில் அமெரிக்காவில் இவருக்கு மாபெரும் இசை அங்கீகாரமும், ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கியும் கவுரவிக்கப்பட்டது. கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு இசை அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லிடியன் நாதஸ்வரம்,  கலைஞரின் தமிழ் ஆற்றலும் கவிதை நடையும்  தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவரை உயிரோடு இருக்கும்போது பார்க்க முடியவில்லை என்றும் தற்போது தான் பெற்ற சாதனையை அவருக்கு சமர்ப்பித்து ஆசி பெற்றதாகவும் தெரிவித்தார். 

மேலும் தான் மிகப் பெரிய இசைக் கலைஞன் ஆக வேண்டும் என்றும் உலக 
அளவில் பெயர் பெற வேண்டும் என்றும் குறிப்பாக அனிமேஷன் எனப்படும் ஹாலிவுட் ஆங்கில திரைப்படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Related Posts