பிரசார பேரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட  ஜலாலாபாத் நகரின் அருகே அப்துல் நாசிர் முகமது என்ற வேட்பாளர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இதையொட்டி நடைபெற்ற பேரணி மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்., 30 பேர் படுகாயம் அடைந்தனர்.   இதையடுத்து அந்தப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்தவொரு தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை

Related Posts