பிரசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம்

இந்தோனேஷியாவில் நடந்த பிரசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை தொடரில், இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தோனேஷியாவில், 23வது பிரசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை தொடர் நடைபெற்றது. பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு இறுதிப் போட்டியில்  இந்தியாவின் மேரி கோம், ஆஸ்திரேலியாவின் பிராங்க்ஸ் ஏப்ரல் மோதினர். இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மேரி கோம், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

மற்ற எடைப்பிரிவு இறுதியில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சுவாமி, ஆனந்தா பிரல்ஹத், அங்குஷ் தஹியா, ஜமுனா போரோ, சிம்ரன்ஜித் கவுர், மோனிகா  ஆகியோர் தலா ஒரு தங்கம் வென்றனர். இறுதியில் தோல்வி கண்ட இந்தியாவின் கவுரவ் பிதுரி  தினேஷ் தாகர், தலா ஒரு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர்.

Related Posts