பிரதமர் இல்லத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கைது

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி பிரதமர் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி : ஏப்ரல்-08

ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கை அம்மாநிலத்தில் வலுத்து வருகிறது. ஆந்திராவின் பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் நடிகர் பவன் கல்யானின் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்திற்கு வெளியே தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் இன்று ஒன்று திரண்டனர். ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகள் ஏந்திய பதாகைகளை வைத்திருந்த அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களை அங்கிருந்து வல்லுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Related Posts