பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

அணைப் பாதுகாப்பு மசோதாவைச் சட்டமாக்கும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு, அணை பாதுகாப்பு மசோதவை திரும்பப்பெற நீர்வளத்துறையிடம் வலியுறுத்த வேண்டுமெனவும்,அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அணை பாதுகாப்பு மசோதாவால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையில் ஜூன் மாதம் 26ம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை சுட்டிக் காட்டியுள்ள அவர், அணை பாதுகாப்பு மசோதா குறித்த தமிழக அரசின் கவலைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் முல்லைப்பெரியாறு, பரம்பிகுளம் உள்ளிட்ட அணைகளில் தமிழகத்திற்கு உள்ள உரிமை பறிபோகும் நிலை உருவாகும் எனவும் மேலும் அணை பாதுகாப்பு ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts