பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான புனித ஆண்ட்ரு விருது: ரஷ்யா அரசு அறிவிப்பு

ரஷ்யா-இந்தியா இடையே உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதை, பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கான கோப்பில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளதாகவும், அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அரசால் 1998ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் புனித ஆண்ட்ரு விருதை, இதற்கு முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங், கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நாசபாயவ் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.

இந்த விருது அறிவிப்பின் மூலம், 7வது வெளிநாட்டு விருதை பிரதமர் மோடி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts