பிரதமர் நரேந்திர மோடியின் வேட்பு மனுவில் முரண்  காங்கிரஸ்  குற்றச்சாட்டு

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராஅளித்துள்ள புகாரில், கடந்த 2007-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி,அங்குள்ள காந்தி நகரில் தனக்கு 326 சதுர மீட்டர் நிலம் உள்ளதாக தெரிவித்து இருந்தார்எனவும்,  ஆனால் 2012 மற்றும் 2014ம் ஆண்டு வேட்பு மனு தாக்கலின் போது, இந்த நிலத்தில் நான்கில் ஒரு பங்கு தனக்கு சொந்தம் என்று மோடி கூறியிருந்ததுகுறிப்பிடப்பட்டுள்ளது.  அதே நேரம் இந்த நிலம் தனக்கு சொந்தமானது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2001ம் ஆண்டு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்ததை அந்த புகார் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  பிரதமர் மோடியின் சொத்து விவரங்களில் முரண்பாடுகள் இருப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி குற்றம் என்பதால் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகாரில்  வலியுறுத்தி உள்ளது. இதனிடையே, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரத்தை தெரிவிக்காமல் பிரதமர் மோடி மறைத்ததாக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் பத்திரிகையாளரும் தற்போதைய மார்க்கெட்டிங் ஆலோசகருமான சகேட் கோகலே மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Posts