பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 15ம் தேதி அவசர ஆய்வுக் கூட்டம்

 நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 15ம் தேதி அவசர ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

                பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.  விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தை நடத்தி வருகின்றன.

                மத்திய பாஜக அரசின் இந்த முடிவு காரணமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பரேவை தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

                இந்நிலையில், டெல்லியில் பிரதமர் தலைமையில் வரும் 15ம் தேதி அவசர ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, மத்திய கொள்கை குழு துணைத் தலைவர் ராஜிவ் குமார், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் விவேக் தேவ்ராய், நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts