பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ந் தேதி சென்னை வருகை

பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ந் தேதி சென்னை வர உள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பின்னர், அவர் தமிழகம் வரவில்லை. இந்த நிலையில், வரும் 30ந் தேதி சென்னை வரும் மோடி, ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை வர உள்ள பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

Related Posts