பிரதமர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்: காங்கிரஸ் முடிவு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா, அருணாசலபிரதேச பாஜக முதல் அமைச்சர்  பீமா காண்டுவின் வாகன அணிவகுப்பில் சென்ற கார் ஒன்றில், நடத்தப்பட்ட சோதனையில் 1 புள்ளி 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்தப்பணம் உறவினர்கள் ஒரு வேலைக்காக கொடுத்ததாக விசாரணையில் கூறியுள்ளனர் எனவும் தெரிவித்தார். பாஜக தலைவரின் உறவினர்கள் கொடுத்த பணம் என்றால், நள்ளிரவில் அந்த பணத்தை முதல்- அமைச்சரின் வாகன அணிவகுப்பில் எடுத்துச்சென்றது ஏன் என்று வினவிய அவர்,  இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகவே கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்படும் எனவும்,  இதற்காக நேரம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் பீமா காண்டு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் செய்வார்கள் எனவும், அதோடு, அந்த பகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என்றுவலியுறுத்தப்படும் எனவும் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா தெரிவித்தார்.

Related Posts