பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலை

பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலை என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அறநிலையத்துறை இந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்கும் துறையாக உள்ளது என தெரிவித்தார். கோயில்களை அறநிலையத்துறை முறையாக பராமரிக்கவில்லை எனவும்,  குடமுழுக்கு நடத்த கூட அவர்கள் பணம் எதிர்பார்ப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இந்துக்கள் அல்லாதோர் அறநிலையத்துறையில் பணியாற்றக்கூடாது என்று எச்.ராஜா வலியுறுத்தினார்.

Related Posts