பிரதமர் மோடியின் பேச்சு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் ஹவுசா என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில்   உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்க முகாம்கள் மீது இந்திய  விமானப்படை விமானங்கள் நடத்திய பாலகோட் தாக்குதலை சுட்டிக்காட்டினார். அவற்றை மனதில் கொண்டு இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  மேலும் நடைபெற இருக்கும்  மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்க போகும் இளைஞர்கள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய இந்திய வீரர்களுக்கு தங்கள் வாக்கை அர்ப்பணிக்க வேண்டும் என பிரதமர் மோடி என வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேச்சு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts