பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் மட்டுமின்றி கேரள வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வார்தாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் தனது கருத்தை தெரிவித்தார். அதில் வயநாடு தொகுதியில் சிறுபான்மை இன மக்கள் அதிகமாக இருப்பதன் காரணமாகவே அவர்களை நம்பி ராகுல் வயநாட்டில் போட்டியிடுகிறார் என கூறினார்.

தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேசியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். இதையடுத்து, இதுதொடர்பான விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Posts