பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பெட்டி: விசாரிக்க  காங்கிரஸ் வலியுறுத்தல்

கடந்த வாரம் கர்நாடகாவில் மோடி பிரசாரம் செய்ய வந்த போது ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு நிறப்பெட்டி இறக்கப்பட்டது.

அது தொடர்பான வீடியோவும் வெளியானது. அந்த பெட்டி ஏற்றப்பட்ட கார் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அணிவகுப்பில் இடம்பெறாத கார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த கருப்பு நிற பெட்டியில் இருந்தது என்ன என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா வலியுறுத்தினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

Related Posts