பிரதமர் மோடியும் முதலமைச்சர் எடப்பாடியும் வீட்டுக்கு போக கூடிய சூழல் வந்துள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோரம்பள்ளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் 100 க்கு நூறு வெற்றி பெறுவது உறுதி எனவும், தமிழகத்தில் உள்ள 22  தொகுதி இடைத்தேர்தலிலும் நாமே வெற்றி பெற உள்ளோம் எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் முதலில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் வீட்டுக்கு போக்க் கூடிய சூழல் வந்துள்ளதாக அவர் கூறினார்.

Related Posts