பிரதமர் மோடி,ராகுல், தேனியில் பிரசாரம்: தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும்,தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 18 சட்டப் பேரவைத் தொகுதிக இடைத்தேர்தலும் வருகிற 18-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளநிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க.-பாஜககூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் முதல் கட்ட பிரசாரத்தை முடித்துள்ளனர். அதே போல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி சென்னை மற்றும் நாகர்கோவிலில் முதல் கட்டப்  பிரசாரத்தைநிறைவு செய்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி, ராகுல் 2-ம் கட்ட பிரசாரத்துக்காக தமிழகம் வருகின்றனர். மோடி 9 மற்றும் 13-ந் தேதிகளிலும், ராகுல் 12-ந்தேதியும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.  இருவரும் தேனி தொகுதியை குறிவைத்துவைத்து இருப்பதால் தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. தேனியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வரும் 12-ந்தேதி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக தேனி நகர் இணைப்பு சாலை, புது பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராகுல் பிரசாரம் செய்துவிட்டு செல்லும் அடுத்த நாளே அதாவது 13-ந் தேதி பிரதமர் மோடி ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதற்காக ஆண்டிப்பட்டி அருகே எஸ்.ரெங்கநாதபுரம் பிரிவில் பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Related Posts