பிரதமர் மோடி அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு  

நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்., 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் போன்ற பாதுகாப்பு படையினரின் சாதனைகளை பிராச்சாரத்தில் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதே போல் பேசிய உத்திரப்பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. ஆனால் இந்த இருவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடந்துகொள்வதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மிதா தேவ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு மீது பல கட்டங்களாக ஆணையத்திடம் விளக்கம் கோரி நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.  இது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த புகார்களில் 8 வழக்குகளை எந்த வித பிரச்சனையும் இன்றி முடித்து வைக்கப்பட்டதாகவும் கூறிய தேர்தல் ஆணையம், மோடி, அமித்ஷா இருவர் மீது நடவடிக்கை தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதனை ஏற்று இருவருக்கும் எதிரான புகாரை உச்சநீதிமன்றம் தற்போது முடித்து வைத்துள்ளது.

Related Posts