பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுவதாக சீதாராம் யெச்சூரி   தேர்தல் ஆணையத்தில் புகார் 

அந்த கடிதத்தில், பாகிஸ்தானில் இந்திய விமான படை நடத்திய தாக்குதல் குறித்து விவரங்களை பிரதமர் மோடி வெளியிட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், வாக்காளர்களின் மனநிலையை மாற்றவே இதனை பிரதமர் மோடி செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திலும் இதனை கூறி வருவது முற்றிலும் தேர்தல் விதிகளை மீறும் செயல் என்றும், விமான படை நடத்திய தாக்குதலை மக்களிடம் கூறி வாக்குகளாக மாற்ற பிரதமர் மோடி முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

Related Posts