பிரதமர் மோடி பாசிஸ்ட் ஆக மாறி வருகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்

பிரதமர் மோடி பாசிஸ்ட் ஆக மாறி வருகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையித்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

சட்டமன்றத்தில் மேகதாது அணை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்றார். கஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் விவசாயம் அழிந்து விட்டது எனவும்,    ஒன்றரை லட்சம் விவசாயக் குடும்பங்கள் அடியோடு அழிந்து விட்டதாகவும் அவர் கூறினார். நிவாரண நிதிக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் கோடி ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு 353 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடந்து பேசிய வைகோ, அணை பாதுகாப்பு மசோதாவின் மூலம் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மசோதாவால்இந்தியாவிலேயே பாதிக்கப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே எனவும்  எச்சரித்தார்.  இந்த மசோதாவை கொண்டு வந்தால்ரஷ்யாவில் நடந்தது போல் இந்தியாவுடன் ஒரு மாநிலம் கூட இருக்காது எனவும், அவர் தெரிவித்தார்.

எந்த ஒரு பாசிச வாதியும் அதிகாரத்தை இழக்க விரும்பமாட்டார்கள் எனவும்,  ஏதாவது ஒரு விஷயத்தின் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். .  பிரதமர் மோடி பாசிஸ்ட் ஆக மாறி வருகிறார். எனவும்,  ஆனால் பாஜகவால், தமிழ்நாடு புதுச்சேரியில் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. எனவும் வைகோ தெரிவித்தார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய வைகோ, சட்டம் தெரியாத கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார்  அணை கட்டுவது  தங்களது உரிமை என பேசுகிறார் எனவும்,  இதேதான் முல்லை பெரியாறு, அணை விவகாரத்தில்நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.  தனித் தமிழ்நாடு இருந்தால் ஐநாவில் முறையிடலாம் என்ற எண்ணம் எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்க முடியாது என்று எச்சரித்த வைகோ, . மத்திய அரசு தேர்தலை மனதில் வைத்து கர்நாடகாவிற்க்கு அணை கட்ட அனுமதி வழங்கினால் இந்திய ஒருமைப்பாடு எனும் அணை உடையும் என்றார்.

Related Posts