பிரபல கன்னட நடிகர் “அம்பரீஷ்” மறைவு: ரஜினிகாந்த் அஞ்சலி.

மறைந்த பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அண்மை காலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது.. அவருடைய மனைவி சுமலதாவும் நடிகை ஆவார்.  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்பரீஷ் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் பதவி வகித்தார். அம்பரீஷின் மறைவு செய்தியைக் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் ஆழந்த இரங்கலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பெங்களூரு சென்ற ரஜினிகாந்த், அம்பரீஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Related Posts