பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்

Want create site? Find Free WordPress Themes and plugins.


தமிழ்த் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்தவர் இயக்குநர் மகேந்திரன். ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மைல் கல்லாக விளங்கிய முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் மகேந்திரன்.

எவ்வித ஆரவாரமும் இன்றி எடுக்கப்பட்ட இவரது படங்கள் பெரும்பாலும் ஆகச்சிறந்த திரைப்படங்களாகவே இருந்தன.

தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மகேந்திரன், பேட்ட, நிமிர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் கடந்த வாரம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மகேந்திரனின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை 5 மணிக்கு மகேந்திரன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தேர்விகப்படுள்ளது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts