பிரான்ஸில் ஜி7 மாநாடு

அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஜி7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் இன்று தொடங்குகிறது.

அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஜி7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் இன்று தொடங்கி வரும் 26ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு ஜி7 நாடுகளின் மாநாடு அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இதில் ரஷ்யாவைச் சேர்த்துக் கொள்வது தொடர்பாக அமெரிக்கா, பிரான்ஸ் அதிபர்கள் முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக நாளை மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

ஜி 7 மாநாட்டில் உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், அந்நிய வர்த்தக சுதந்திரம்,பாதுகாப்பு போன்றவற்றை பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

Related Posts