பிரான்ஸில் நீர்வழி பறக்கும் டாக்சி அறிமுகம்

பிரான்ஸ் நாட்டில் நீர்வழி பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்த ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரான்ஸ் : மே-24

சீ பபிள்ஸ் என்ற தனியார் நிறுவனம், அந்நாட்டின் பாரீஸ் நகரில் ஓடும் சீன் ஆற்றில், பறக்கும் டாக்சிகளை இயக்க உள்ளது. இதற்காக அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆலின் திபோல்ட், பறக்கும் டாக்சியை இயக்கி பரிசோதனை மேற்கொண்டார். ஆற்று நீருக்கு மேல் அரை அடி உயரத்தில் பறந்து சென்ற டாக்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பாரிஸ் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு  மாற்றாக பறக்கும் டாக்சிகள் இருக்குமென ஆலின் தெரிவித்துள்ளார். தண்ணீருக்கு மேல் வேகமாக பயணிப்பதால், பயண நேரம் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Posts