பிராமணர்கள் குறித்த ஓம் பிர்லா கருத்துக்கு தலைவர்கள் எதிர்ப்பு

பிராமணர்கள் குறித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓம் பிர்லா, மற்ற சமூகத்தினரை எப்போதும் வழி நடத்தி செல்லும் இடத்தில் பிராமணர்கள் இருந்திருக்கிறார்கள் என்றார். பிறப்பின் ஒழுக்கத்தால் அவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் ஒம் பிர்லா தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், மக்களவை சபாநாயகர் என்பதாலேயே மரியாதை அளித்து வருவதாகவும், பிராமணர் என்பதால் மரியாதை அளிக்கவில்லை எனவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஜாதியை கொண்டாடும் மன நிலை கண்டிக்கத்தக்கது எனவும், அவர் மக்களவை சபாநாயகராக இருப்பது வேடிக்கையானது எனவும் கபில் சிபல் கூறியுள்ளார். இதேபோல் பல்வேறு தரப்பினரும் சபாநாயகரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts