பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக முடிந்தது

இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம், விண்ட்சார் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இங்கிலாந்து : மே-19

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி, தனது காதலியான அமெரிக்க நடிகை மேகன் மார்கிலை இன்று கரம்பிடித்தார். இவர்களின் திருமணம், இங்கிலாந்து தலைநகர் லண்டன் பெர்க்சையரில் உள்ள வின்ட்சார் கோட்டையில், 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இளவரசர் ஹாரி குதிரைப்படை சீருடை அணிந்து கம்பீரமாக தேவாலயத்திற்கு வந்ததும், மணப்பெண் மேகன் மார்க்கெல் அழைத்து வரப்பட்டார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணத்தை முன்னிட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். சாலை வழியாக ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட ஹாரி – மேகனுக்கு, அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான மக்களை வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Related Posts