பிரிட்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

 

 

ஸ்வீடன் நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றடைந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏப்ரல்-18 

பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக, ஸ்வீடன் நாட்டுக்கு சென்றார். ஸ்வீடனில் நடைபெற்ற நோர்டிக் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு, இன்று காலை பிரிட்டன் சென்றடைந்தார். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பிரதமர் மோடியை, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அதன்பின்னர், பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், விசா மற்றும் குடிமையுரிமை விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்தும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே உடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளார். தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. அதன்பிறகு பக்கிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.  

Related Posts