பிரிட்டிஷ் ஏர்வேஸ் பைலட்கள் வேலை நிறுத்தம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன பைலட்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

ஊதியத்தை முறையாக வழங்காமல், கொடுக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்வதாக புகார் கூறும் விமானிகள்,  ஆண்டு விடுப்பு நாட்களை நிர்வாகம் குறைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும், அவர்கள் செவிசாய்க்காததால், முதல் கட்டமாக இரண்டு நாட்களும், பிறகு வரும் 27-ந் தேதியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திடம் பைலட்கள் சங்கம் நோட்டீஸ் கொடுத்தது.  அதன்படி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நாளையும் வேலை நிறுத்தம் தொடரும். இதனால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெரும்பாலான விமான சேவைகள் முடங்கியுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் சுமார்  ஆயிரத்து 51 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என கூறப்படுகிறது.

Related Posts