பிரிவினைவாதிகள் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளதால் ஸ்ரீநகரில் கடும் கட்டுப்பாடு

பிரிவினைவாதிகள் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளதால் ஸ்ரீநகரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததோடு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு விட்டதைக் கண்டித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபடலாம் என்பதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் போராட்டங்கள் நடைபெறாத காரணத்தினால், கட்டுப்பாடுகளை அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது. இந்த நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக, ஸ்ரீநகரில் உள்ள ஐநா ராணுவ கண்காணிப்பு அலுவலகத்தை நோக்கி மக்கள் பேரணியாக செல்ல வேண்டும் என்று பிரிவினைவாதிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்துள்ள போலீசார், லால் சவுக் மற்றும் சோனவர் பகுதியை நோக்கி பேரணி நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts