பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல்

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12-ந் தேதியுடன் முடிகிறது. இது சாத்தியமானால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு,தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே, இதனை தவிர்க்கும் விதமாக ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி பிரிட்டன்நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்க்கட்சியினர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மசோதா அங்கு ஒரு வாக்கு வித்தியாசத்தில் நிறைவேறியது.

அதனை தொடர்ந்து மேலவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட  அந்த மசோதா அங்கும் ஒருமனதாக நிறைவேறியது. இதனை தொடர்ந்து  அந்த மசோதாவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துகையெழுத்திட்டார். இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதை தடுக்கும் நடவடிக்கை சட்டமானது. இதையடுத்து பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க ஒப்புதல் பெற வேண்டும்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts