‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடைபெற்றதில் பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவித்ததால் 2019-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது. ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம் அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற தவறியதால் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை சிக்கலானது.

இந்த ஒப்பந்தம் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2 முறை ஓட்டெடுப்பு நடந்தபோதும் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தீர்மானத்தையும் 2 முறை இங்கிலாந்து எம்.பி.க்கள் நிராகரித்ததால், ‘பிரெக்ஸிட்’டை தாமதப்படுத்த வேண்டிய சூழல் உருவானது.

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்க்கட்சியினர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

தீர்மானத்துக்கு ஆதரவாக 313 ஓட்டுகளும், எதிராக 312 ஓட்டுகளும் கிடைத்தன. ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானம் மேல்சபையில் நிறைவேறிவிட்டால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’டை மேலும் தாமதப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தெரசா மே தள்ளப்படுவார்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts