பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி – ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பாரீஸ் : மே-31

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில், முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் தகுதி சுற்று வீரர் ஜார்மி முனார் மோதினர். இதில், நோவக் ஜோகோவிச் 7-6, 6-4, 6-4 என்ற நேர்செட்டில், ஜார்மி முனாரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Posts