பிரேசிலில் கட்டிமுடிக்கப்படாத கட்டிடங்களுக்கு இடையே கயிற்றின் மீது நடந்து சாகசம்

புவி ஈர்ப்பு விசைக்கு சவால் விடும் வகையில் பிரேசிலில் கட்டிமுடிக்கப்படாத கட்டிடங்களுக்கு இடையே கயிற்றின் மீது நடந்து சிலர் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தரையில் இருந்து உயரமான இடத்தில் இரண்டு முனைகளில் கட்டப்பட்ட கயிற்றின் மீது சமநிலையில் நடந்து சாகசத்தில் ஈடுபடுபவர்கள் ஸ்லாக்லைனர்ஸ் (Slackliners) என்று அழைக்கப்படுகின்றனர். பொதுவாக பூங்காக்களில் இது போன்ற சாகசத்தை குறைந்த உயரத்தில் பலர் செய்வர். இந்நிலையில் பிரேசிலின் சாவோ பாவ்லோ நகரில் கட்டி முடிக்கப்படாத, கைவிடப்பட்ட உயரமான கட்டிடங்களுக்கு இடையே கயிறு கட்டி ஒரு குழுவினர் இந்த சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழு சாவோ பாவ்லோ நகரில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

Related Posts