பிலிப்பைன்ஸில் நாட்டில் நிலநடுக்கத்தால் 8 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

 பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரதான தீவான லூஜனுக்கு வடக்கே குறைந்த மக்கள் தொகையை கொண்ட  படானேஸை நிலநடுக்கம் தாக்கியது. இத்தீவில் உள்ள முக்கிய நகரான இத்பயாத்திற்கு வடகிழக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 காலை 4.16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 5 புள்ளி 4 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தினால் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்தன. அதிகாலை வேளையில் தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். சில இடங்களில் சாலைகளிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கி  8 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மேயர் ரவுல்-டி.சாகன் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அதே பகுதியில் காலை7.38 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. 2 மணி நேர இடைவெளியில், 9 மணியளவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் 5 புள்ளி 4 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பஸ்கோ மற்றும் சப்தங் நகரங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இந்தோனேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts