பிளஸ் டூ பொதுத் தேர்வில், 91.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் டூ பொதுத் தேர்வில், 91.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை : மே-16

2017 – 2018 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1-ஆம் தொடங்கி, ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, அரசு ஏற்கனவே அறிவித்தப்படி, இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதில், 91.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 94.1 சதவீத மாணவிகளும், 87.7 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் டூ தேர்ச்சி விகிதத்தில், விருதுநகர் மாவட்டம் 97 புள்ளி பூஜ்யம் ஐந்து சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. 96 புள்ளி மூன்று ஐந்து சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்திலும், 96 புள்ளி ஒன்று எட்டு சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் 83 புள்ளி 3 ஐந்து சதவீத தேர்ச்சியுடன், இந்த ஆண்டும் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

4,847 மாணவ, மாணவிகள், 1151 முதல் 1180 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 8,510 மாணவ, மாணவிகள் 1126 முதல் 1150 மதிபெண்கள் பெற்றுள்ளனர். இதேபோல், 71,368 மாணவ,மாணவிகள் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்.

Related Posts