பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியீடு

பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை : மே-29

அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் நாளை காலை 09.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடியதேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும் என்றும் தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts