பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25 ஆம் தேதி மறுத்தேர்வு

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25 ஆம் தேதி மறுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-16

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ப்ளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார்.  தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25 ஆம் தேதி மறுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்த செங்கோட்டையன், மாணவர்களின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.  

Related Posts