பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைப்பது குறித்து  அரசு பரிசீலித்து வருவதாக : அமைச்சர் செங்கோட்டையன்


பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைப்பது குறித்து  அரசு பரிசீலித்து வருவதாக  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியாவே வியக்கும் வகையில், தமிழகத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவர்களுக்கு கூடுதல்பாடங்கள் சுமையாக இருப்பதாகவும், அவற்றை படிப்பதற்கு நாட்கள் போதவில்லை எனவும் மாணவர்கள் ,ஆசிரியர்கள்  தரப்பில் இருந்து  கோரிக்கைகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே, பிளஸ் 2 தேர்வுக்கானபாடங்களை குறைப்பது குறித்து  அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Posts