பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி,காரைக்காலில் 92.94% மாணவ,மாணவிகள் தேர்ச்சி 

புதுச்சேரி மாநிலத்தில  மொத்தமுள்ள 53 அரசு மற்றும் 82 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 694 மாணவ- மாணவிகள் இந்தாண்டு  பிளஸ்-2  தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 657 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 6 ஆயிரத்து 236 பேரும் , மாணவிகள் 7 ஆயிரத்து 421 பேரும் அடங்குவர். இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 92புள்ளி 94 சதவீதம் எனவும். இது கடந்த ஆண்டைவிட 5புள்ளி 62 சதவீதம் அதிகம் எனவும் பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

Related Posts