பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது சாத்தியமில்லை

பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது சாத்தியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை அமல்படுத்து நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் தடை விதிப்பால் பெரும்பாலான உணவகங்கள் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் கைப்பைகளை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள எளிதில் மக்கும் வகையிலான கைப்பையை பொதுமக்களுக்கு வழங்கத் தொடங்கி உள்ளனர். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், கணவன் – மனைவி போல் இருந்த மக்களும், பிளாஸ்டிக்கும் தற்போது விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும்,  பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது சாத்தியமில்லை என்றார்

Related Posts