பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தியா தீவரம் : ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாக ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் சிறப்பு அழைப்பை ஏற்று, ஜி-7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை, பெருங்கடல் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் தொடர்பான அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டுள்ளது என்றார். நீர்நிலைகள், தாவரங்கள், வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பல்லுயிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று தெரிவித்தார்.
சமூக ஏற்றத்தாழ்வுகளை போக்கி அதிகாரங்களை வழங்குவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்த அவர், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பை தீவிரப்படுத்தி வருவதாகவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

Related Posts