பி.எஸ்.எல்.வி.- சி 45 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்

ராணுவத்தின் உளவு பணிகளுக்காக இஸ்ரோ உருவாக்கிய 436 கிலோ எடை கொண்ட எமிசாட் செயற்கைகோளை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., – சி 45 ராக்கெட் இன்று காலை 9.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, லித்துவேனியா ஆகிய நாடுகளுடைய 28 செயற்கைகோள்களை சுமந்த படி பி.எஸ்.எல்.வி., – சி 45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.

அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா நாட்டின் 2 செயற்கைக்கோள்களும், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக்கோளும் பிஎஸ்எல்வி – சி 45 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட்டது.

Related Posts