பி.வி.சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் தைபே பாய் பூ போவை எதிர்கொண்டார். 43 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து, 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பி.வி.சிந்து இந்த சுற்றில் அமெரிக்காவின் பீவென் ஜாங்கை எதிர்கொள்கிறார்.

Related Posts