பீகாரில் கனமழை – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு

பீகாரில் கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால், பீகாரின் 13மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கனமழை மற்றும் வெள்ளப்பேருக்கு காரணமாக பீகாரில் மட்டும் சுமார் 88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கனமழையால் நேர்ந்த விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, சண்டிகர் உள்ளிட்ட வட மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Posts