பீகாரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது

பீகாரில் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது இயக்க பயங்கரவாதி தவுபிக் ரஸா, பீகார் மாநிலம் கயா மாவட்டம் புனியட்கஞ்ச் பஜார் பகுதியில் பதுங்கி வாழ்ந்து வருவதாக மேற்குவங்க மாநில போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அம்மாநில சிறப்பு அதிரடிப்படை, பயங்கரவாத தடுப்பு பிரிவு பீகாரில் பயங்கரவாதி இருந்துவந்த வீட்டை அடையாளம் கண்டு உள்ளூர் போலீசார் உதவியுடன், வீட்டை உளவு பார்த்து வந்தனர்.

வீட்டை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதியை கைது செய்தனர். வீட்டிலிருந்து சர்ச்சைக்குரிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் 2007–ம் ஆண்டில் இருந்து ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தில் பயங்கரவாதி பணியாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது. அவனிடம் போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Related Posts